வியாழன், 25 நவம்பர், 2010

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி

தஞ்சாவூர், நவ. 23: மத்திய அரசின் பொன்விழா கிராம சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், கிராமப்புற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு வேலைவாய்ப்புக்கான இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சண்முகம்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் பொன்விழா கிராம சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், கிராமப்புற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு வேலைவாய்ப்புக்கான இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் சேர்வதற்கான நேர்முகத்தேர்வு தஞ்சாவூரில் டிச. 1, பட்டுக்கோட்டையில் டிச. 2, கும்பகோணத்தில் டிச. 3 ஆகிய தேதிகளில் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெறுகிறது.

நேர்முகத்தேர்வில் பங்கேற்போர் 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி, இளங்கலை பட்டப் படிப்பு. நேர்காணலுக்கு வரும் போது கல்வித் தகுதியின் சான்று மற்றும் குடும்ப அட்டையின் நகல் எடுத்து வரவேண்டும். சென்னை தனியார் நிறுவனத்தால் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்றவர்கள் டெலிகாம், பிபிஓ, ஷோரூம், பார்மஸி ஆகிய இடங்களில் பணியாற்ற வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக