சனி, 14 ஆகஸ்ட், 2010

தொழில் பயிற்சி: வேலைவாய்ப்பற்ற இளைஞர், பெண்கள் விண்ணப்பிக்கலாம்

தொழில் பயிற்சி: வேலைவாய்ப்பற்ற இளைஞர், பெண்கள் விண்ணப்பிக்கலாம்

First Published : 14 Aug 2010 01:21:52 PM IST

Last Updated :



தஞ்சாவூர், ஆக. 13: நகர்ப்புற, கிராமப்புறங்களைச் சேர்ந்த வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பெண்கள் தொழில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சண்முகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ரெடிமேட் கார்மென்ட்ஸ், சேலை வடிவமைப்பு, கேஸ் வெல்டிங், பி.பி.ஓ. கால் சென்டர், டி.டி.பி. கணினி, மின்னணு பராமரிப்பு, பிளம்பர், நர்சிங் உதவியாளர் உள்ளிட்ட தொழில்களில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

ஒவ்வொரு பயிற்சிக்கும் தலா 25 பேர் தேர்வு செய்யப்படுவர். நர்சிங் உதவியாளர் பயிற்சி 6 மாதங்களும், பிற பயிற்சிகள் தலா மூன்று மாதங்களும் நடைபெறும். இந்தப் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படும் ஒவ்வொருவருக்கும் பயிற்சிக்கு வரும் நாள்களுக்கு மட்டும் தினமும் | 25 வீதம் உதவித் தொகையாக அளிக்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் சான்றிதழ் அளிக்கப்படும். மேலும், வேலைவாய்ப்பு பெற்றுத் தர பயிற்சி நிலையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். பயிற்சி பெற விரும்புவோர் 18 முதல் 35 வயது வரை உள்ளவர்களாகவும், 8-ம் வகுப்பு, அதற்கு மேலும் படித்தவராகவும் இருக்க வேண்டும். நர்சிங் உதவியாளருக்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த மாதம் 19-ம் தேதிக்குள் திட்ட அலுவலர், மகளிர் திட்டம், சி-5, ராமகிருஷ்ணாபுரம், மணிமண்டபம் அருகில், தஞ்சாவூர் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ குடும்ப அட்டை, கல்வித் தகுதிக்கான சான்றிதழ்களுடன் (மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றின் நகல்) ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக