சனி, 14 ஆகஸ்ட், 2010

இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

First Published : 14 Aug 2010 01:21:03 PM IST

Last Updated :



தஞ்சாவூர், ஆக. 13: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தஞ்சை கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச எலக்ட்ரீஷியன் மற்றும் மோட்டார் ரீவைண்டிங் பயிற்சி பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மையத்தின் இயக்குநர் எம். ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்த இலவச பயிற்சி ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் செப்டம்பர் 18-ம் தேதி வரை நான்கு வாரங்களுக்கு நடைபெறுகிறது. தினமும் பேருந்து கட்டணம், மதிய உணவு, தேவையான பயிற்சிப் பொருள்கள் அனைத்தும் இலவசமாக அளிக்கப்படும்.

பயிற்சியில் சேர விருப்பமுள்ள 18 முதல் 30 வயது வரையுள்ள, 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை இயக்குநர், ஐ.ஓ.பி. கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம், 4-பக்கிரிசாமி வீதி, ஈஸ்வரி நகர், மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சை-613004 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு 04362-242377 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக